மஹாளய பித்ருபக்ஷம் 09.09.14 செவ்வாய் முதல் 23.09.14 செவ்வாய்வரை…

நமது வாழ்க்கை உயர்வதற்கு உதவி செய்துள்ள இறந்த தாய், தந்தை, தாத்தா, பாட்டி, மாமா, மாமி,அத்தை முதலிய அனைவருக்கும் நாம் நன்றி செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பை அளிக்கும் காலமே மஹாலயபக்ஷம் எனப்படும். பக்ஷம் என்றால் 15 நாட்கள், மஹாளயம் என்றால் மஹான்களின் இருப்பிடம். இறந்து போனாலும் கூட நமது முன்னோர்கள் இந்த மஹாளய பக்ஷம் 15 நாட்களும் பூமிக்குவந்து நம்முடன் தங்குவதாக சாஸ்திரம். ஆகவேதான் இந்த 15 நாட்களிலும் பித்ருக்களுக்கு நாம் அன்னமளிக்க வேண்டுமே தவிர, மற்ற விசேஷமான பூஜைகளையோ, ஹோமங்களையோ செய்யகூடாது என்கிறது சாஸ்திரம்

மஹாளயத்தை 1. பார்வணம் 2. ஹிரண்யம் , 3. தர்ப்பணம் என்று மூன்று வழிகளில் செய்யலாம்.

1) பார்வணம் என்பது ஆறு ப்ராஹ்மணர்களை ( பித்ருக்களாக ) வரித்து, தந்தை, தாய், தாத்தா, பாட்டி முதலியவர்களுக்கு ஹோமம் செய்து, ப்ராம்ஹணர்களுக்கு சாப்பாடு போடுவது ,

2) ஹிரண்யம் என்பது அரிசி வாழைக்காய் முதலியவைகளை தந்து தர்ப்பணம் செய்வது,

3) தர்ப்பணம் என்பது தானாகவே அமாவஸைபோல் தர்ப்பணமாகச் செய்வது.

இவற்றில் ஏதாவது ஒருவிதத்தில் கட்டாயம் தனது பித்ருக்களுக்குச்செய்து கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.

ஏதாவது ஒரு நாள் மட்டும் மஹாளயம் செய்பவர்கள்
மஹாபரணி ( 13.09.14– சனி) , மஹாவ்யதீபாதம் (17-.09.14 புதன்), மத்யாஷ்டமி ( 16.09.14செவ்வாய் ) கஜச்சாயா (21.09.14 ஞாயிறு), ஆகிய நாட்களில் ஏதாவது ஒரு நாளில் மஹாளயம் செய்யலாம். இவை மிகச் சிறந்த நாட்கள் ஆகும்.

ஸன்யாஸியாக ஸித்தியானவர்களுக்கு ( 20-09-14 சனி ) அன்றும்,
ஆக்ஸிடென்ட் முதலியவைகளால் துர்மரணமடைந்தவர்களுக்கு ( 22-09-14 திங்கள் ) அன்றும்,

கணவருக்காக மனைவி செய்யும் மஹாளயம் மற்றும், ப்ருஹ்மசாரி செய்யும் மஹாளயத்தை ( 23-09-14 செவ்வாய் – அமாவாஸையன்றும் செய்யலாம்.

மஹாளயபக்ஷத்தில் தாய் தந்தையருக்கு வருஷாவருஷம் செய்யும் சிரார்த்தம் நேர்ந்தால், சிரார்த்த நாளன்று சிரார்த்தம் செய்து விட்டு அதற்குப்பிறகு மற்றோரு நாளில் மஹாளயத்தைச் செய்ய வேண்டும்


Order Now